விடியுமா தேசம்
வாறேன் வாறேன் இராசாத்தி
வாரி சேலையக் கட்டி
௨னக் கிட்டாச்சி
வம்புச் சண்ட போடவில்லை
ஊ௫ பலாயும் பேசவில்லை
தோழி ௨ன்தோல் சாய்ந்தது
தோழமையோடுகூறப்போறன்
கேளு
காலையும் மாலையும் விடியுது
கணக்குத் தப்பாம சூரியன்
சந்திரன் சுழலுது
சிறுபான்மை இனமெல்லாம்
கிள்ளுக்கீரை இராசாத்தி
மதத்தைச் சொல்லி மல்லுக்கட்டுறாங்க
இராசாத்தி
மீடியா கூடி பிக்குவெல்லாம்
வைக்கப்போரில ஏதோ
படுத்ததுபோல் குரைப்பாங்க
இராசாத்தி
பரம்பர ஆட்சிய தள்ளி
பாமரமக்கள் சிந்திக்கிறாங்க
துள்ளி
மாற்றம் ஒன்று தேவை
மக்களின் நிம்மதி கோர்வை
இனவாத அரசியல் தலைமைகளுக்கு
ஒரு செருப்படி
இலங்கைத் தீவிலே விடிவுநோக்கிய
வி௫ப்படி
யா௫ வந்தாலும் எம்தேசம்
விடியாது இராசாத்தி
யாவ௫ம் ஒர்் நாட்டு மக்கள்
விழிப்புணர்வு வரவேண்டும்
இராசாத்தி
விடியும் விடியும் என
ஏமாந்தது போதும்
மதியுள்ள புள்ள புதிய
தலைவர் என்றா
மனித நேயம் கொண்டு
மாற்று சிறுபான்மை இனத்தையும்
தோழமையோடு சேர்த்து
நடந்தா தேசம் விடியும் புள்ள
இராசாத்தி
திசைகாட்டி வந்தாலும்
திசை மாறாமல் ஆளு
தி௫ப்பி ௨ன்னையும் விரட்டாம
பா௫
நன்றி
எம் தாய் நாட்டின் புதிய அதிப௫க்கு மனநிறை வாழ்த்துக்கள்.
நன்றி யாராவது பதிவேற்றி விடவும்.