சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 279 ]
“விடியுமா தேசம்”

பெற்றதாயை ஒக்கும் பிறந்த பொன்னாடே!
எம்தேசத்தின் விடியலும் தூரத்தே கேட்கிறதே!
கேட்கிறதா தமிழா உன்காதுக்குள்ளே?
சுதந்திர பூமி உன்னை வாவென்று அழைக்கிறதே!

நூற்றாண்டு முன்னினைவுகள் இன்பந்தருகிறதே!
புலம்பெயர்ந்தாலும் பிறவியால் நீ தமிழனடா!
அயல்நாடு உன்வீடல்ல வெறும் விடுதியடா தமிழா!
விண்ணில் பறந்தாலும்பறவைகூடுவந்துசேருமடா!

என்னவளமில்லை உந்தன் திருநாட்டில்?
அஞ்சி ஒடுங்கிப்பதுங்கினாய் வெளிநாட்டில்!
ஓட்டுள்புகும் ஆமை வீரத்தை மறைத்ததா கூட்டில்?
அச்சமென்பது மடமை அஞ்சாமை உன் மரபுரிமை

தாய்நாட்டின் அவலக்குரலால்உதிரம் கொதிக்குதே!
அடிமை விலங்கொடித்து ஆட்சியை வெல்வாயா? மக்கள் பசி தீர்த்துத்தமிழனாய் வாழ்வாயா?
பதவிசெல்வங்களுடன் தாய்மண்ணில் மடிவாயா?

தன்னுயிர்காக்க புலம்பெயர்ந்த கோழைகளே!
இங்கு பதுங்கியிருப்பவரோ அதிகோழைகளே!
இரண்டுமின்றி தூபதீபங்காட்டும் துரோகிகளே!கீரிமலை,கன்னியாயில் நீராடினால்மானம் வருமா?

மானமுள்ளோர் பெருமையுடன் மாவீரரானார்! பழம்பெருமையும் தாய்தேசமும் பாழாய்போனதே!
“பிறவாமை வேண்டும் இறைவா பிறந்தால்
மீண்டும் தமிழினத்தில் பிறவாமை வேண்டும்.”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.