சந்தம் சிந்தும் சந்திப்பு
தேரதல்
————
வாக்கு வாங்க வாக்குத் தருவார்
வாங்கிய பின் தந்த வாக்கு
காணாமல் போய்விடும்
வாக்கு கொடுத்து
வெற்றி பெற்றவர்
வானாளவ புகழ் பெற்று
அரியணையில் அமர
வாக்களித்த மக்கள்
வாய்பிளந்து நிற்க
ஒன்றுமே நடக்காது
படிப்பறிவு இல்லாதோர்
பாமர ஏழைகள்
நம்பித் தந்த வாக்கு
நாணயமில்லாமல். போனதே
இதை உணர்பவர் யாரோ
அடுத்த முறை வந்து
வாக்கை அள்ளி வீச
புத்தியில்லா மக்கள்
திரும்பவும வாக்களிப்பார
அதற்கீடாக ஒரு ஐந்து பந்து
இனாமாம்
இதில் மேடை போட்டு
வேற கத்தல்
இது யாருக்குத் தேவை
மக்களின் தேவை பூர்த்தி
செய்யா தோர்
தாம் மட்டும் தரமாக வாழுவர்
இதைக் கேட்க யாருமிலர்
திருந்தாத மக்கள் இருக்கும் அவரை
வாக்கு வேண்டி வெற்றி பெறுபவர்கள்
தொடர்ந்து கொண்டே இருப்பர்
வாக்கும் படர
தேர்தல் நடக்கும்
இவைமாறி நல்ல தேர்தல் வந்து
மக்கள் நலம் பெறுவது எப்போது!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
16.9.24