சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.09.2024
கவி இலக்கம்-279
“தேர்தல்”
—————
ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல்
இலங்கையில் இம்மாதம் புரட்டாசி 21ல் நடப்பதில்
பர பரப்பாக மக்களின் ஓட்டங்கள்
அரசியல்வாதிகளின் தேர்தல் கூட்டங்கள்
துண்டு பிரசுரங்கள் சுவர் ஒட்டிகள்
நகரம் நகரமாய் தேர்தல்
விளம்பரங்கள்
ஒவ்வொரு சின்னங்கள் போட்டியாளர்களின் அடையாளங்கள்
கடும் கண்காணிப்பில் கடமையில் காவலர்கள்
வாக்களிப்பில் அடையாளம் இடுவதில் விரல் மையில்
கடும் கட்டுப் பாட்டில் தேர்தல் சாவடிகள்
நல்ல தலைவரை தேர்ந்து எடுப்பதில் வாக்காளர் எதிர்பார்ப்பில்
புலம்பெயர் மக்களும் நல்ல தலைவரை எதிர் பார்த்து காத்தலில்
ஜெயா நடேசன்
ஜேர்மனி