சசிச
தேர்தல்
விரல்களின் மதிப்புதனை உணர்த்துகின்ற நாளிது
அரசியலின் மாற்றத்திற்காக வந்துகொண்ட நாளிது
காதிலே வாக்குறுதி பூச்சுற்றும் அரசியல்வாதி
காசுக்கு விலைபோகப்போகுது ஓட்டுக்களில் சரிபாதி
ஜந்தாண்டுக்கொருமுறை வரும் சனநாயக திருவிழா
மந்திரிகள் மட்டிலிது பணநாயக தெருவிழா
இலவசங்களில் ஏமாந்து வாக்களிக்கும் ஏமாளிகள்
குழப்பிவிட்டு கூத்து பார்திடுவார் கோமாளிகள்
தலைவிரித்தாடும் ஊழலைப்பற்றி முழங்கிடுவார் எதிர்க்கட்சி
நிலைநாட்டுவோம் நல்லாட்சியையென ஆளுங்கட்சி
ஓட்டு வேட்டைக்காக பற்பல நாடகங்கள்
பாட்டுப் பாடவென அவர்அவர்கென ஊடகங்கள்
முடிந்துவிட்டால் தேர்தல் சொன்னதெல்லாம் போச்சு
படியேறி வாக்குத் தேடியவரும் மறைந்தாச்சு
பாழ்பட்ட ஓட்டியந்திரம் கள்ளவோட்டை கூட்டிவிடும்
ஆள்வதற்கு அருகதையற்றவரையே அரியணையில் ஏற்றிவிடும்
ஜெயம்
13-09-2024