சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 278
17/09/2024 செவ்வாய்
தேர்தல்
————
ஐந்து வருடம் ஒருமுறை…
ஐயா வருவது விதிமுறை!
சந்து சலசலக்கும் மறுமுறை!
சகலதும் தருவார் கைநிறை!

மறந்த வாக்குறுதியைக் கிளறி,
மன்னவர் தருவார் மறு பிறவி!
கறந்த பாலை முலைக்கேற்றி,
கற்பனை தனை தலைக்கேற்றி!

வாயில் வடையும் சுட்டிடுவார்!
வாக்கு வங்கியை ஏற்றிடுவார்!
கோயில் குளம் சென்றிடுவார்!
கும்மிடு போட்டு களைத்திடுவார்!

பள்ளிக்கு மதில் கட்டித்தாறன்!
பக்கத்து தெரு போட்டுத்தாறன்!
கல்லுக்கு தாரும் பூசித்தாறன்!
கடைக் கட்டிடம் கட்டித்தாறன்!

தேர்தலும் நடந்து முடிந்திடிச்சு!
தேடிய வாக்கும் கிடைத்திடிச்சு!
கார்முகில் பெய்து கரைந்திடிச்சு!
காரெலாம் தெற்கே பறந்திடிச்சு!
நன்றி
மதிமகன்