சந்தம் சிந்தும் கவிதை

துவாரகன் சாமினி

எட்டி உதைத்து
பிண்டம் கிழித்து
மண் தொடுகையில்
அன்னைக்கு ஓர் வலி

அவசர உலகில்
ஓடி ஓடி உழைத்து
ஆளாக்கப் பாடுபடும்
அப்பாக்களுக்கு பல வலி

பதினெட்டு வயது
பருவ மங்கைக்கு
வயசுக் கோளாற்றால்
காதல் வலி

வலி சுமந்த மண் விட்டு
கடல் கடந்து வந்தாலும்
தாய்நாட்டுப் பற்று
தீராத வலி

வலி வலி வலி
ஆண்டவன் வழங்கிய
அழிக்க முடியாத வரம்
வலி……..

– துவாரகன் சாமினி
10.09.2024