சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

வலி
வலியின் வலிமை வந்தவர்க்குத் தெரியும்
கலியுகத்தில் காண்கின்றோம் அதையும் இங்கே
மனதில் துன்பம் மாறா வேதனை
தினமும் வாட்டும் தீராத் தலைவலியாய்

குடும்பத்தில் குழப்பம் கொடுக்கும் மனவலி
தடுக்கும் வலிமை தந்தால் பெருமை
பல்லும் வலித்தால் பார்க்கலாம் வைத்தியரை
சொல்லும் சுட்டால் சுமப்பது வலியே

உறவின் வலிமை உதவுவதில் தெரியும்
மறக்க முடியா மனவலிமை தரும்
வந்த துன்பம் அன்பில் மறையும்
எந்த வலியும் இன்பத்தில் விலகும்/

கமலா ஜெயபாலன்
சந்தம் சிந்தும் சந்திப்பு