சந்தம் சிந்தும் கவிதை

கீத்த்கா பரமானந்தன்

வலி!
அலையிலாக் கடலுமில்லை
அல்லலில்லா ஆயுளுமில்லை!
கிலிகொண்டு நிற்பதனால்
கிடைப்பது ஏதுமில்லை
வல்லமையைத் துடுப்பாக்க
வென்றிடலாம் வலிகளையே
கல்லையும் கடவுளாக்கி
காற்றலையும் கானமாக்கி
எண்ணற்ற காட்சிகள்
மண்ணிலே சாட்சிகளாய்!

உளிபட்ட கற்களே
உருவாகும் சிலையாக
வலிகொண்ட பாதையினை
வலிமை உழைப்பாலே
வனப்பாக மாற்றி
வாகைசூடி நிற்பவர் நாம்
நலிவினிற் சோரது
நலமாகும் வழிசமைப்போம்!

அழகான பூமியெங்கும்
ஆயிராமாய் வலியிருந்தும்
தளமாக்கி நின்றவர்க்கு
தரணியெங்கும் இன்பமுண்டு!
வலியினை வென்றிட
வலிமையே. மருந்தாகும்
வாழ்வினில் பற்றியே
வசந்தத்தை நிறைப்போம்!

கீத்தா பரமானந்தன்
10-09-24