சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
வலி
———-
வார்த்தைகள் அளந்து
பேச வேண்டும்
வார்த்தைகள் கண்டபடி
பேசினால்
மனதில் ஏற்படும் வலி
சிலர் செய்கையால்
மனமோ தவிக்கும் வலி
சொந்தம் பந்தம் என
அருகில் நின்று தரும்வலி
நட்பு என்று சொல்லி
நாவினால் பேசுவது வலி
நொந்து போன உள்ளத்தை
நோண்டி விறாண்டுவது வலி
எச்சங்கள் சொச்சங்கள்
தூற்றுவது வலி
உடைந்த உள்ளமதை
உணர்ச்சிகளை புரியாது
புத்தி சொல்வதாய் கொல்வது வலி
இத்தனை வலியையும் இறைவன்
கொடுத்தது
என்துணை என்னுடன்
இல்லாத தாலோ
இதைவிட பெரிய வலி
என்ன!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
9.9.24