வியாழன் கவிதை

விரல் நுனியில் அறிவியல்

இரா.விஜயகௌரி

விரல் நுனியில் அறிவியல்
வித்தகத்துள்ஆளும் மொழியியல்
செயலாற்றும் வினைத்திறனும் ஆங்கே
சேர்ந்தெழுந்தால் வாழ்வே அரசியல்

முடங்கி நின்று முனகி வந்தால் -நமை
அடக்கி எழும் ஆழுமைகள் இவர்
வினைத்திறனை வினயமுடன் எடுத்தாண்டால்
கொதித்தடங்கும் கோமகனார் செயல் இழைகள்

எதைத் தொடுத்து எதை எடுத்து நம்
சமூகத்தின் ஈனத்தினை. களைந்தெடுத்து
உயர்வழி நோக்கி பயணிப்போம் ஆங்கு
தனித்திறனை. சீலமுடன் உய்விப்போம்

ஏமாற்றும். இழி நோக்கும் சுயநலமும்
நொடியெல்லாம் விரல்நுனிக்குள் கலந்து விட்டால்
ஆராய்ச்சி மணி அடித்தும் அசராமல்
கொள்ளியிடும் கூட்டங்கள் வழி சமைக்கும்

நமக்குள்ளே நாமாகி நமதென்று
நடிப்பின்றி நயமுடனே நம்பிக்கை கொண்டு
விதந்தாழும் அறிவியலை வினயமுடன்
இசைந்தெழுந்து இனமாகி வழி சமைப்போம்