வாழுங்காலம்
பட்டு வண்ணச் சேலைகட்டி
பாதை யொன்று வரவழைத்து
கெட்டி மேளம் கொட்டிடவே
கீதா உந்தன் கரம்பிடித்தேன்
சொட்டுத் தேனும் மெல்லவிழும்
சொர்க்கம் காணும் வாழ்வுமிது
கட்டி பழமாய் உன்னழகில்
கண்ணன் நானும் மயங்கிநின்றேன்
நட்டு வைத் வாழைமரம்
நாளை வாழ்வு உனைப்போலே
தொட்டு நானும் கட்டித்தாலி
தோகை உந்தன் கழுத்தினிலே
எட்டு மட்டும் எம்வாழ்வு
எல்லை வகுத்து ஓடிடட்டும்
கட்டும் கூந்தல் அழகினிலே
கன்னி நீயும் வாழ்ந்திடுவாய்
வாழும் வாழ்வு வனப்புத்தரும்
வண்ண வடிவம் கொடுத்துவிடும்
கூழும் சேர்ந்து குடித்தாலும்
குடும்ப வாழ்வு மகிழ்வுபெறும்
தாழ்வே யெமக்கு வந்தாலும்
தக்க பாடம் படித்துநாமும்
மாழும் காலம் வசந்தமாக
மகிழ்ந்து நாமும் வாழ்ந்திடுவோம்
நகுலா சிவநாதன் 1771