வியாழன் கவிதை

வாழ்க்கை என்பது நீ

ஜெயம் தங்கராஜா

கவி 733

வாழ்க்கை என்பது நீ

வாழ்க்கையின் அர்த்தம் புரிவது எப்போது
வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது எப்போது
புரிந்தது சில புரியாதது பல
நேரம் மட்டுமே வீணாகின்றதா அல்லது வாழ்க்கையும் வீணாகின்றதா
சோகங்களை மறைத்த வாழ்க்கை மறந்த வாழ்க்கை அல்ல
நீ யோசிக்கின்றபடியே வாழ்க்கை அமைகின்றது அதை நீ மறவாதே

அடுத்தவரை கவருவதற்கான அடுத்தவரின் எண்ணங்களுக்காக பலர் தாங்கள் வாழாத வாழ்க்கை
இது யாருக்காகவோ இன்னொருவருக்காக ஆயுள் இழப்பு
இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலையுடன்
தாம் தேர்ந்தெடுக்காப் பாதையிலே பலரின் வாழ்க்கை நகர்கின்றது

மகிழ்ச்சியாக வாழ்க்கை உள்ளதா யாருக்காகவோ இயல்பை மாற்றியவரிடம் அது இருக்காது
ஏனெனில் அவர் தான் விரும்பாத பாதைகளில் பயணிப்பவர்
துணியாத இவர்களுக்கு வாழ்கை பயங்காட்டுமேயொழிய வழி காட்டாது
வாழ்வின் அர்தமும் நோக்கமும் மகிழ்ச்சி ஒன்றுதான்
ஏன்தானோ பயப்படும்படியான வாழ்க்கை
மற்றவர்களின் மூளையில் ஒரு வாழ்க்கையா

சரி இல்லாவிட்டாலென்ன கிடைக்காவிட்டாலென்ன வாழ்க்கை வீணடிக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு அல்ல
நீர்க்குமிழியைப்போன்றது மறைவதற்குள் இரசிக்கவேண்டும்
வாழ்க்கை அவரவர் விருப்பத்திலேயே வாழப்படவேண்டிய ஒன்று
பிரச்சினையோ சந்தோசமோ அவரவர் மனங்களே ஆளட்டும்
நீ நீயாக இருக்கப்பழகு பிடித்தவர்கள் அருகிருக்கட்டும்
பிற்குறிப்பு அதிக ஆசையில்ல்தவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழுகின்றார்கள்

வலியாய் வாழ்க்கை இருக்கின்றதா சிரித்துக்கொண்டே இரு
வலிகள் வழிகளாகி நேர்மறை சிந்தனைகள் உருவாகும்
மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும்
மனம் ஆட்டிப்படைக்கக் கூடாது
அவமானப்படு அது உன்னைச் செதுக்கும்
மீண்டும் உருவாக்கமுடியாத ஒருமுறை தருணம்
உன்னைப்புரிந்து தெளிவானால் அதுவே அறிவின் அடையாளம்
பிடிக்காத குப்பையைவிட பிடித்த பொக்கிசம் வாழ்வாகலாமே

ஜெயம்
10-07-2024