04.07.24
ஆக்கம் 323
கஞ்சா
கூழ்க் கஞ்சி குடித்து
ஆளாக நிமிர்ந்தவன் பாதை பாழ்பட்ட கஞ்சா
போதை வீழ மாய்ந்து மூழ்கடித்ததே
தேள் கொட்டியது போல
கொஞ்சங் கொஞ்சமாக
நஞ்சு கலந்த வஞ்சகர் ட
வலையில் அஞ்சாது
புகுந்து தாறுமாறாய்ச்
சூழடித்ததே
செஞ்ச பாவம் துரத்திப்
பிடித்து பஞ்சமா பாதகங்கள் கரைச்சுக்
குடித்து அந்நிய கலாச்சாரம் வெடித்து
தமிழன் சந்ததி நெஞ்சம்
முற்றாய் மறந்ததே
கஞ்சா அடிச்சு அடிச்சு
பஞ்சணையில் சுகமேற
போதை ஊசி ஏற்றி ஏற்றி ஆளின் உயிர்
குடிச்ச சாம்பல் வெடிச்சு
வெடிச்சுப் பஞ்சாகப்
பறக்குதே உலகெங்கும்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து