கஞ்சா
காலம் நகர்கின்றது கவலைகள் பிறக்கின்றது
வாழ்வுகள் மலருமென்று மனதிலே உறுதியொன்று
தாழ்வுகள் தேடிவரத் தாய்மனமும் வாடிநிற்க
தேடும் குழந்தைகள் இன்றென்ன கஞ்சா
கஞ்சா கஞ்சா காசினியெங்கும் கஞ்சா
நஞ்சாக வருமென்று கனவிலும் நினையாமல் கஞ்சா
கஞ்சாவும் இல்லையென்றால் வாழ்வும் இல்லையென்பார்
துஞ்சித்து நிற்கின்றனர்
துவண்டுமே விழுகின்றனர்
மிஞ்சிக் கொண்டது சாவிற்கு கஞ்சா
பஞ்சாகப் பறக்கின்றனர் பறந்துமே மோதுகின்றனர்
கஞ்சாவைக் கண்டதும் கரும்பாகச் சுவைக்கின்றனர்
காய்ந்த மாடுகள் கம்பிலே விழுந்தது போல் கஞ்சா
கஞ்சாவும் வேண்டாம் காலனையும் தேடாதே
இச்ச்கொண்டே எமனையும் நாடாதே
கஞ்சாவின் எண்ணத்தை விரட்டிடவும் மாட்டாயா
சிவருபன் சர்வேஸ்வரி