வியாழன் கவிதை

அடையாளம்

ராணி சம்பந்தர்

20.06.24
ஆக்கம் 321
அடையாளம்

குடிசையில் கஞ்சி குடித்து மகிழ்ந்தோம்
தேடிய உற்றாருடன்
கூடி வாழ்ந்தோம்
நாடிய அமைதியுடன்
எழுந்து நின்றோம்

ஈவு இரக்கமின்றிய
இனப் பிரச்சினை
காவு கொள்ள
செத்து மடிந்தோம்
சோர்வான வேதனை
துரத்த உறவு தொலைத்து வீடின்றி
நாடின்றி அலைந்தோம்

அகதியாய் அந்நிய நாடு
புகுந்தோம்
திக்கற்றவன் தமிழன்
என் அடையாளம் இன்றி
ஒடுக்கப்பட்டோம்

அரை வாழ்வு அல்ல
முழு வாழ்வும் இங்கே என விலாசமின்றிய
உயிர் மூச்சு நிற்கும் வரை விற்கப்பட்டோம்

தமிழன் என்ற சொல்லிற்குத் தரணி எங்கும் கறுவல் என்ற
அகதி முத்திரையே
அடையாளம் அடையாளம்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து