வியாழன் கவிதை

அடையாளம்

இரா விஜயகௌரி

அடையாளம் தொலைத்தலைந்த
விடை தொலைத்த வினாக்குறியாய்
தொலைதூரதேசமெங்கும். பரந்து
இன்று அடையாளம் பொறித்தெழும் அகதிகள் நாம்

மொழியின்றி ஒளியின்றி கதியின்றி
கலங்கிய விழிகளுடன் விடை கொடுத்த
அன்பின் கடலுக்குள் ஆழமுத்தெடுத்த
பெரும்பரப்பின் விடைகொடுத்த அனாதைகளானோம் அன்று

எம் மொழிக்குள்ளும்எமை விதைத்தோம்
முரணான தேசத்தின் முரண்பாடுகளுக்குள் எமை
புடமிட்டு புரட்சி விதையாக்கி நிலையாக்கி
எழுதாத புத்துயிர்ப்பால்அடையாளமிட்டோம் இன்று

விரிந்த தேசமெங்கும் எம் வாழ்வின்
எழுச்சியினால் இழைந்தோம் விளைந்தோம்
இறுகிய கரத்தின் வலுக்கொண்டுழைத்தோம்
அகதி இனம் இன்று ஈழத்தமிழினமாய் முத்திரை பொறித்ததின்று