வியாழன் கவிதை

” பேராசான் மெளனகுரு ஐயா “

ரஜனி அன்ரன்

“ பேராசான் மெளனகுரு ஐயா “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.06.2024

அரங்கியலுக்கும் ஆய்விற்கும் ஆசான்
கூத்துக் கலைக்கும் பேராசான்
ஆனித்திங்கள் ஒன்பதில் உதித்த அறிஞன்
கலைக்காக வாழ்வினை அர்ப்பணித்த கலைஞன்
சாதனைத் தடங்களைப் பதித்த சாதனைத் தமிழன்
சாதனைகள் பலதை இன்றும் சாதித்து வாழும்
முனைவர் மெளனகுரு ஐயாவை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்வோம் !

ஆசானாய் பேராசானாய் விரிவுரையாளனாய்
நுண்கலைத்துறையின் தலைவராய்
கலைப் பீடாதிபதியாகவும் பணியாற்றி
வடக்கையும் கிழக்கையும் கலையோடு இணைத்து
அருகிவரும் கூத்துக்கலைக்கு உயிர்கொடுத்து
அரங்க ஆய்வு கூடங்களை நிறுவி
விருப்போடு கலைப்பணி செய்யும் பேராசானை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்வோம் !

கலை வாழ்வினை ரசிக்கும் கலைஞன்
கலைப் பணியினைத் தேசப்பணியாக்கிய மானிடன்
தனித்துவமான நாடகப் பேராசான்
ஆய்வுப் பணியினை ஆழமாய் நேசிக்கும் வாசகன்
நவயுகத்தில் வாழும் அரங்கியல் நிபுணனை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்வோம் !