வியாழன் கவிதை

ஏனிந்தப் பிடிப்பு

ராணி சம்பந்தர்

30.05.24
ஆக்கம் 318
ஏனிந்தப் பிடிப்பு

ஒவ்வொருவரிலும் வெவ்வேறு பிடிப்பு
ஆளைப் பார்க்காமலே
குரலில் ஓர் பிடிப்பு
கோழையானாலும்
ஏழையானதால் துடிப்பு

அழகில்லை உள்ளமோ
வெள்ளை
பழகியதில் மனதில் பிடிப்பு
கறுப்புத் தான் மனமோ
நல்ல குணம்
அதனால் இந்தத் துடிப்பு

அதிகம் கதைக்காத
பொறுமை
எதிலும் மன்னிக்கும்
மாபெரும் மேதை
இதனாலே அந்தப் பிடிப்பு

ஆறுதல் பேச்சு அன்பில்
துடிப்பு
கூறிய அத்தனையும்
யாருக்குத் தான் பிடிக்காது போகும்
நடிக்காது நடந்து
கொண்டால்
எல்லோருக்கும் பிடிக்கத்
தூண்டுமே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து