அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்
கருவிலே சுமந்து
கனங்களை தாங்கி
பச்சை குழந்தை சிரிக்க
பன்னிர் குடம் உடைக்க
பிஞ்சு பிள்ளை முகம் கண்டு
பினி யாவும் மறந்து
இளவரசியாய் வளர்க்க தன்
இளமை இழந்து
ஓய்வு இலாலாமல்
ஓடோடி உழைக்கும்
உன்னத உயிர் அவள்
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை