சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.04.2024. கவி இலக்கம்-261.
“பெருமை”
—————-
வீட்டிற்கு நல்லவளாக வாழ்ந்து
நாலு பேர் போற்ற வாழ்ந்து காட்டினால்
பிறந்த வீட்டிற்கு பெருமை
நாம் வாழும் நாட்டில் அரசாங்கம் மக்களுக்காக வாழ்ந்தால் நாட்டிற்கு பெருமை
கல்வியில் படித்து உயர்தரம் பெற்று நல்ல தொழில் பார்த்தால்
படித்த பாடசாலைக்கு பெருமை
மருத்துவ தொழிலில் மருத்துவ ஊழியர்கள் செய்யும் பணிக்கு மருத்துவ மனைக்கு பெருமை
இயற்கையை ரசித்து அழகான வரிகள் எழுதும் கவிஞனுக்கு பெருமை
இணையத்தில் ஆக்கங்களை எழுதிக் கொள்ளும் எழுத்தாளர் யாவருக்கும் தட்டிக் கொடுப்போரால் பெருமை
ஜெயா நடேசன் ஜேர்மனி