சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
ஊக்கம்
————
ஊக்கம் உடையோர் உழைத்து உண்ணுவர்
தர்க்கம் புரிவோர் தாமே புலம்புவர்
ஏக்கம் கொண்ட. பெண்மை ஏங்கித் தவிக்கும் நிலைமை
போக்கும் அவர் வாழ்வில் புதுப்புது
கடமை
முயற்சியினால் முன்னுக்கு வந்தோர் பலருண்டு
இகழ்ச்சியினால் பின்னடைய்தோரும்
சிலருண்டு
கவர்ச்சியினா்ல் கவரப்பட்டோரும்
கடைசியில் காணாமல் போனதுமுண்டு
வாழ்க்கை என்னும் ஏட்டில் வளர்வது
சாத்தியம்
வசந்தம் தேடும் நோக்கில்
வழுக்கி விழுவதும் மத்திம்ம்
சேர்க்கை அது செமர்த்தியாய்
அமைதல்
செழுமை தரும் நற்பலனே
அவரது ஊக்கம்
ஊக்கம் தாக்கமின்றி
தேக்கம் நல்லவையாய்
நாட்டில் நல்லவை நடக்கட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
1.4.24