“மாறுமோ மோகம்”
-சந்தம் சிந்தும் சந்திப்பு-
எதிலும் மோகம் இன்றய சந்ததி
கனவில் கூட காலங்கள முன்பு
காணாத காட்சியை காணுறோம் இன்று
ஆடை அணிக்கு
ஆயிரம் செலவு
அடிக்கடி மாறும்
டிசைனில் எடுப்பு
போட்ட உடுப்பை
மறுபடி விழாக்கு
போட விரும்பா
பாஷன் காலம்
கடனை வங்கி அள்ளி கொடுக்க
காட்டில் இழுத்து
கடனில் வாழுது
வீட்டு பண்டம்
நாட்டம் போச்சு
ரேக் எவே எடுத்து
தின்பதில் விருப்பம்
வாடகை வீட்டில்
வாழ்வை ஓட்டி
கட்டு காசுக்கு
காரை வாங்கி
எல்லாம் கடனில்
என்பதே வாழ்வு
மாறுமோ மோகம்
மறிபடி சிக்கன
வாழ்வில் நாட்டம்
வர வழி உண்டோ
-சிவரஞ்சினி கலைச்செல்வன்