சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மாறுமா மோகம்…
வேறுபட்ட வாழ்வரணில்
வீழ்ந்திருக்கும் இடர்நிலையில்
காலம் தந்த சுவடுகள்
மாறுகின்ற முகவரி
ஏற்றிருக்கும் இனமானம்
ஏதிலியாய் வாழ்கின்றோம்
சூழல் தரும் சுவாசத்தில்
சுதந்திரத்தின் வாழ்விலே
நாளும் நாம் மாறினோம்
நலிந்து நலிந்து வாழ்கிறோம்
மாறும் மோகப்புயலிலே
வேகம் கொண்ட படகென
வேற்றினத்துச் சாயலில்
பூசும் வர்ணம் ஆயிரம்
விலத்தும் சாயம் சிலரசம்
விலத்தா நிலை பலர் வசம்
மாறுமோ மோகமெனில்
மாறுபட்ட பதிலுண்டு
கூறப்பட்ட குவலயத்தில்
குழப்பம் தான் மறுமொழி!
நன்றி