🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-29
26-03-2024
மோகம் மாறுமோ
பணம் பணமென மனித ஒட்டமும்
பதவி பதவியென நாற்காலி ஆட்டமும்
மேகம் கலைவது போல் மோகம் மாறுமோ
மேலும் மரணித்து மண்ணில் தீருமோ!
பழிக்குப் பழி வாங்கும் மோகம் மாறுமோ
பரிதாபம் பார்த்து இங்கு மனம் இரங்குமோ
விழிக்குள் கணணி மோகம் மாறுமோ
வீழ்ந்து கிடக்கும் மன அழுத்தம் தீருமோ!
பெற்றவர் பாசம் பிள்ளை கொள்ளுமோ தேவையற்றவை மேல் மோகம் மாறுமோ
முதியோர் காப்பகம் நிறைந்து வழியுமோ
மூத்தோர் எல்லாம் நடைபிணமோ!!
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.