மாறுமோ மோகம்!
தீராத ஆசைகளால்
திரள்கின்ற ரோகம்
திசையின்றி அலைகின்ற
மந்தைகளாய் ஆட்டம்!
ஆறாத ரணத்தோடு
அறிஞ்சர்கள். கூட்டம்!
கண்டதே காட்சி
கொண்டதே கோலமாய்
பண்பாடு கலாசாரம்
பார்த்தறியா விழாக்கள்
பணம்படுத்தும் பாடாய்ப்
பரவுகின்ற வேகம்
மாறுமோ இம் மோகம்?
வன்முறை அழிவுகள்
வாழ்வெட்டுக் கூட்டங்கள்
பொல்லாத போதையில்
போக்கற்று இளையோர்கள்
பிஞ்சுகளை அழிக்கும்
கஞ்சாவின் மயக்கம்
மாறுமோ மோகம்!
நாகரிகப் பாதை
நவயுக அலங்காரம்
வறுமைக் கிழிசலின்றி
வனப்புக் கிழிசலுடன்
வளையவரும் வாழ்க்கை
கனக்குறது மனது
மாறுமோ மோகம்!
விஞ்சான உலகம்
விரித்திட வலையாய்
கணினித் திரைக்குள்ளே
கணமும் விளையாடி
உணர்வைத் தொலைத்து
உயிரெடுக்கும் மூர்க்கம்
மாறுமோ மோகம்
மாற்றுமோ சமுதாயம்!
கீத்தா பரமானந்தன்
25-02-24