சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
——
மாறுமோ மோகம்
——————
முன்பொரு காலம் வெளிநாட்டு மோகம்
பின்பொரு காலம் உள்நாட்டு மோகம்
புலம்பெயர்ந்த மக்களுக்கு
புளித்துவிட்டது இந்தவாழ்க்கை
மயக்கம் தெளிந்து மாயை விலகி
தேடுகிறார் மண்வாழ்வை
மூத்தோருக்கு அன்பில் மோகம்
இளசுகளுக்கு உடையில் மோகம்
குழந்தைகளுக்கு பெற்றாரில் மோகம்
காதலனுக்கு காதலியின்மேல் மோகம்
மோகம் கொண்டவர் மேகம் போலசைவார்
தாகம் கொண்டவர் தண்ணீர் தேடியலைவார்
வேகம் கொண்டவர் விண்ணோக்கி ஓடுகிறார்
போகத்திற்காய் வயலை உழவர் உழுகிறார்
கிளியோபற்றாவில் ஏற்பட்ட மொகத்தால்
யூலியசீசர் நாட்டையே இழந்தான்
கைகேயி மேல் கொண்ட மோகம்
ராமனையே காட்டிற்கு அனுப்பியது
சீதைமேல் கொண்ட மோகம்
இராவணனை அழியவைத்தது
இப்படி மொகத்தால் அழிந்தவரை
பார்ததாவது
இனிமேலாவது மாறுமோ மோகம் நம்
மக்களிடையே!
கெங்கா ஸ்ரான்லி