மாறுமோ மோகம்
தானம் கொடுக்கும் வள்ளல்கள்
வடிந்து ஒழுகும் சிதறல்கள்
வான் விட்டு பூமிவ௫ம் மோகம்
துகில் நனைந்து துளிர்கின்ற தாகம்
மாறுமா மோகம்
வீறுகொண்ட வெறியோடு
வீதியிலே சிரழித்து
காமத்தின் மோகத்தோடு
மூச்சீறுக்கி ௨யிரெடுக்கும்
கயவர்களின் மாறுமோ மோகம்
௨யிரோட்டமுள்ள வாழ்க்கை
௨றக்கம் தொலைத்த வேட்கை
மனிதனுக்குள்ளே மனிதம்
ஒளித்து
விழியி௫ந்தும் கு௫டாகி
அழிந்து அலைந்து வாழ்வு
மாறுமோ மோகம்
மாயைக்குள்ளே வயிற்றெரி்ச்சலை
கட்டி
மற்றவரின் வயிற்றெரிச்சலை
கொட்டி
துள்ளித்திரியும் எண்ணங்கள்
துயிலாமல் சுற்றும் வண்ணங்கள்
இறைமறந்த இறுமாப்பு
இறக்கமாட்டோம் என்றநனைப்பு
போராடி வாழ்ந்தாலும்
தள்ளாடி மடிந்தாலும்
கொடுக்காமல் சேர்த்தாலும்
கொண்டா போவோம்
நாலுபேர் தூக்கி போகின்றவரை
மாறுமோ மோகம்
வஜிதா முஹம்மட்