சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.03.2024
கவிதை இலக்கம்-258
மாறுமோ மோகம்
——————–
மாற்றம் ஒன்றே மாறாதது
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு தருணத்திலும்
மாற்றங்கள் நிகழ்கின்றன
சில வேகமாக மாறும்
சில மெதுவாக மாறும்
சில தலை கீழாக மாறக்கூடியவை
இரவு பகலாகிறது பகல் இரவாகிறது
கோடை போய் குளிர் வருகிறது
மீண்டும் குளிர் அகற்றி கோடை அரங்காளுகிறது
பூ காயாகி கனியாகிய பின்
கனி செடியாகி கனி செடியாகி பூப்பூக்க
புது வழி தருகிறது
மாறுமோ தினம் ஆண்களின் மனம்
வன் செயல்கள் பாலியல் கொடுமைகள்
மாறுமோ என்றும்
போதை அடிமையில்
பல காம இச்சைகளும் மரணங்களும்
உலகம் போகும் போக்கின்படி ஒழுகாதீர்கள்
உங்கள் உள்ளங்களை புதுப்பித்து
மாற்றம் பெறுங்கள்
மாறுவதெல்லாம் உயிரோடு
மாற்றுவதெல்லாம் மண்ணோடு