மாறுமோ மோகம்
விடுமுறை வந்திட்டா
வெளியிலே கூட்டம்
விடியல் புரியாமல்
தெருவிலே ஆட்டம்
பியரும் சிகரட்டும்
போதை ஊசியும்
பித்துப் பிடித்து
அலையும் இளசுகள்
அன்னை தந்தை
ஓய்வில்லா வேலை
ஆகாரம் தேடியே
ஓடினம் சாலை
புலத்து வாழ்வும்
சீரழிவாய் போகுது
புலம்பும் பெற்றோரும்
மாறனும் எல்லாமே