சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்மையைப் போற்றுவோம்
————
மண்ணிலே பூத்த மலர்களும் மென்மை
மண்ணிலே பிறந்த பெண்களும் மேனமை
பெண்தான் நாட்டின் கண்கள் என்பர்
பெண்தான் வீட்டின் ஒளிதரும் குத்துவிளக்காம்
பண்பை விதைக்கும் பாற்குடம் இவள்
பணிவன்பைக் காட்டும் பொன்மிகு தாரகையிவள்
தேனாகச் சொரியும் தேன்தமிழ் பேச்சிவள்
மானாகத் துள்ளும் மருண்ட விழியவள்
சிந்தனையில் சிறந்த சிற்பி அவள்
எந்தையரைப் போற்றும் எழில்மிகு குணத்தவள்
ஆளுமை நிறைந்தவளும் அவள் தான்
ஆட்டிப் படைப்பவளும் அவள் தான்
வேதனை அனுபவிப்பவள் வேப்பிலைக் காரி
சாதனை படைக்கவே சக்தியாக நிற்பாளே
சோதனை வந்தாலும் துவளமாட்டாள்
சோர்ந்து முடங்கி கிடக்க மாட்டாள்
கல்வியிலே சிறப்பு காரியத்தில் முனைப்பு
கலையில் தென்றல் கலாச்சாரத்தில் வேட்கை
குடும்பத்தில் ஒற்றுமை சுமக்கும் சுமைதாங்கி
சமூகத்தில் இவள் ஒரு புதுமைப்பெண்
பெண்ணானவள் தாயாக, தாரமாக தங்கையாக அக்காவாக மகளாக
தாங்கிப் பிடிக்கும் அன்பெனும்
தூணாவாள்
இவ்வளவு மாண்புடைய பெண்களை போற்றுவோம்
பெண்மையை வாழ்த்துவோம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி