சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

“பெண்மையை போற்றுவோம்”
சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆச்சியின் வீரம் ஆற்றலை எண்ண
அம்மா கைப்பக்குவ
சமயலை நினைக்க
இன்றய கால இளைய பரம்பரை
எண்ணிப்பார்க்க நிறைய உண்டு
ஆச்சி பள்ளியை
அறிந்ததே இல்லை
அம்மா பக்குவ பட்ட அன்றே
பள்ளி தடுப்பு படித்தது பாதி
எண்ணி விரலால் எப்படி கணக்கு
பண்ணுவ ஆச்சி
பார்க்க வியர்ப்பு
அம்மியில் அரைப்பு
ஆட்டுக்கல் ஆட்டல்
திருவி எடுப்பா
தேங்காய் பூவை
திருவணி ஆட்டி
குரக்கன் உழுந்து
அரைப்பதும் நடக்கும்
பச்சை அரிசியை நனையப்போட்டு
பக்குவமாக
உரலில் இட்டு
உலக்கையால் இடித்து
அரைத்தெடுப்பாவே
கப்பி அரிசியை
அரிக்கன் தட்டால்
தட்டி எடுத்து இடிப்பா மீள
மிளகாய் இடித்து
தூளாக்கிடவும்
அவர்கள் கைகள்
மிஷினய் இயங்கும்
ஒற்றை லங்கா சேலையை
குளித்த பின்
எட்ட கிழுவையில்
கட்டி முடிந்து
மறுமுனை உடலை
மறைக்க வெயிலில்
காய விடுகிற காட்சி நினைவில்
பழந்தண்ணி சோறு
பனாட்டு ஒடியல்
குரக்கனில் பிட்டு
இறுக்க உடம்பு
நோய் நொடி
இன்றி நூறு வாழ்ந்தவ
அந்த பெண்மை ஆற்றலை பண்பை
இந்த காலம் எங்கே
காண்போம்?
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-