சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.03.2024. இலக்கம்-257
“பெண்மையைப்
போற்றுவோம்”
உலகம் போற்றும் உத்தமி பெண்ணே
சரித்திரம் படைத்து சான்றுகள் பகிரந்திட
பேதங்கள் அகற்றி புதுமை படைத்திட
கவிதை பாடிய பாரதி பெண்ணே
உளி செதுக்கிய கல்லின் சிற்பமாய் ஒளிர்ந்திடு பெண்ணே
தூரிகை வரைந்த ஓவியமாய் அழகுப் பெண்ணே
தாயாக தாரமாக தமக்கையாக தலைவியாக
எத்தனை அவதாரங்கள் பெண்ண
தாய்மையை சொல்கிறேன் நீயுன்றி உலகேது பெண்ணே
கருவறையில் பத்திரமாக காவலில் சுமந்தவள்
அன்புப் பால் ஊட்டி அறிவிப பால் கொடுத்து
வளர்த்தவள்
ஆராரோ பாடி மடியில் தூங்க வைத்தவள்
அன்பின் இருப்பிடமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ வைத்தவள்
உணவை ஒறுத்து உடலை வெறுத்து
பத்தியம் காத்தவள்
பேதமை அகற்ற துணிவுடன் வெளியேறு
பெண்ணினத்தின் பெருமையை
உலகிற்கு எடுத்து காட்ட புறப்படு பெண்ணே
ஜெயா நடேசன் ஜேர்மனி