சந்தம் சிந்தும்
வாரம் 257
பெண்மையை போற்றுவோம்
ஆடும் அந்த அரங்கில்
அணி திரண்ட பெண்கள்
அபி நயங்கள் சேரத்து வென்றிடும்
கலைத்திறன் போட்டி!
ஆடிய பெண் சிறுமியின்
மேல்அங்கி
பின்புறமாக அவிழ்ந்திட
அங்கமது சிறிதாக
தெரிய
ஆடுவதை பார்த்த
பெண் நடுவர் பெண்மணி
அரங்க பாட்டை
நிறுத்த சொன்னார்!
அந்தோ அச்சிறுமி
அழுத படி ஒடினாள்
அரங்கை விட்டு!
அவமானம் வர கூடாது
என்ற நோக்குடன்
மேல் அங்கியை
சீர் செய்து
அச்சிறுமி மானம் காத்து
அத்திறன் போட்டி
மீண்டும் நடந்த செயலால்
நடுமைத்துவ பெண்மணியின்
பெண்மையை போற்றும் செயல்
போற்றுதலுக்கு குறியதன்றோ !
க.குமரன்
யேர்மனி