[ வாரம் 256 ]
“வேலியடைப்போம்”
விதைப்பதற்கு முன்னே வேலி அடைக்கவேண்டும்
கடன் பெற்றவன் கேட்காமலே தரும்படி கொடுத்தல் விவேகம்
யூதர்களுக்கே உரிய மூளை தமிழருக்குமுண்டு எனக்காட்டும்
ஒருசொல் பலபொருள் தரும் சிறப்பு தமிழுக்கே பெருமை
நிலத்திற்கு வேலியிட்டு உரிமையை நிலைநாட்டுபவன்
நாலுவேலி நிலத்தில் வாழ்க்கையை வளமாக்குவான்
எல்லைமீறும் ஆசைகளுக்கு முதலில் வேலியடை
தொல்லை தரும் துன்பங்களை அதுவே தடுக்கும் அணை
பள்ளி செல்லும் சிறுவனைப்பார் கையில் காசில்லை
கண்ணில் படும் பண்டமெல்லாம் தின்றுவிட ஆசை
களவுக்கும் தயாராக்கும் மனதில் ஒருநப்பாசை
நல்லவேளை! அன்னையின் போதனை அவனைத்தடுத்தது
வேலியின்றி தரவையாய் கிடக்கும் நிலத்தைப்பார்
நல்லவையாய் அவை மாறி நற்பயன் தராதா கேள்
வேண்டிய நேரத்தில் வேலியிட்டுப்பராமரித்தால்
தலைமுறை சரியாகுமா? தக்க பலன் கிட்டாது போய்விடுமா?
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.