விழித்திடு பெண்ணே ! கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.03.2024
விழித்திடு பெண்ணே விழித்திடு
உடைத்திடு தடைகளை உடைத்திடு
படைத்திடு சரித்திரம் படைத்திடு
புரட்சிப் பெண்கள் வாழ்ந்த பூமியிது
புரட்டிப் போட்டுவிடு கயவர்களை
புதுயுகம் படைத்துவிடு விழிப்போடு !
பதுமையென்றும் பாவையென்றும்
பவ்வியமாய் அழைத்து உன்னை
பாசாங்கும் செய்திடுவார்
மாயவலையில் சிக்காது
தூயவழியில் பயணித்து
தூர விலத்திவிடு துஸ்டர்களை !
பேதையரே நிஜக்கண்களை
ஒருகணம் திறந்து பாரும்
காமுகர்களால் கயவர்களால்
கசங்கி மடிந்தவர் எத்தனை பேர்?
விடியும் பொழுதுகள் உன்னாலே
நொடியும் நீ தயங்காதே பெண்ணே
முடியும் என்று போராடு முனைப்போடு செயற்படு
விழித்திடு பெண்ணே எப்போதும் விழிப்போடு இருந்திடு !