சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 265
பகலவன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 215

வைகறை மார்கழி
வழிபாட்டு பேரொலி
மையல் விடியலில்
மகிழ்வுடன் எழுந்து
பெய்த மழை நீர்
பெருகிய கிணற்றில்
கை வாளி கோல
களிப்பாய் முழுகி
வைரவர் ஆலய
வைபவமான
திருவெம்பாவைக்கு
சென்ற அன் நாட்கள்.
அருகே சீமெந்து
தொழிலக சங்கு
ஆறு மணி என
முழங்க தொடங்க
திருவெம்பாவை
திருவிழா தொடங்கும்.
ஆர வார மகாஜனா பள்ளியை
அடக்கி கிடத்தும்
தவணை விடுமுறை.
கலைப்பெரு மன்றம்
இயங்கிய காலம்
கானமாய் இசைக்கும்
திருபள்ளி எழுச்சி
கலைத்திடும் துயிலை
கலகலப்பாய் பலர்
காலை தொழுகையில்
கலந்திட குவிவர்
ஐயர் சிதம்பர
பிள்ளையர் சங்கும்
ஆலய அருகு
வீதிகள் தோறும்
பையன் பேரன்
விளக்குடன் நடக்க
பாடல் இசையுடன்
ஊர்க் உரு கொடுக்கும்
பண்ணிசை செல்வர்
கோயிலில் பாட
பட்டயம் பெறுவார்
உழவர் விழாவில்
கண்ணொடு நாவும்
கனிந்து சுரக்கும்
கைகளில் பொங்கலை
ஏந்தி சுவைக்க
பாக்கயம்மா ரீச்சர்
மேற் பார்வையிலே
பந்தி இருத்தி
படையல் பங்கீடு.
பட்டணத்தார் எங்கள்
ஆறு முக மாஸ்ரர்
பார்வை எங்களை
அடக்கி இருத்தும்.
இறுதி நாள் வரும்
எழுந்தருளி திருவிழா
செல்லைய பண்டார
சிறப் அலங்கரிப்பில்
வைரவர் வடிவாய்
எழுந்தருளி வருவார்.
ஆள் ஆர வாரம்
அன்றுடன் முடியும்
கோயில் முன்றலில்
மாடுகள் உறங்கும்
அடுத்த வருடமும்
மார்கழி விடியலில்
ஆலய விடியல்
ஆரம்பம் காணும்.
-எல்லாளன்-