ணந்த்ஹன் சிந்தும் சந்திப்பு!
பகலவன்!
காலக் கணிப்பின்
கதிரொளி இவனாய்ப்
பாலம் போட்டே
ஞாலம் இயக்கும்
நல்லொளிச் சுடராம்!
ஆக்கலும் அழித்தலும்
அண்டத்தின் நகர்வும்
ஆக்கிடும் ஞானியாய்
அனைத்திலும் பகலவன்!
சுழல்கின்ற பாதையின்
சூத்திரம் கொண்டே
நிலவிடும் இருளும்
நீத்திய விடியலும்!
பசுமையையின் பரவசம்
பாலையின் கனலும்
தணலெரிக் குழம்பும்
தந்திடும் காரணி
தாரணி வாழ்வினைத்
தரமிட்டு நின்றிட
ஆராதனையும் அறிவியலிலும்
வேரான கோளெனக்
காலாதி காலமும்
காட்சியாய்ப் பகலவன்!
கீத்தா பரமானந்தன்
04-03-24