சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பகலவன்
***********
நெருப்புப் பிழம்பாய்த் தோன்றிடுவான்
இருளின் ஒளியாய் உதித்திடுவான்
விடியலின் பிறப்பாய் இருந்திடுவான்
அடிவானம் ரசிக்கவும் வைத்திடுவான்
நுனிப்புல்லில் இருக்கும் திவலைப்
பனித்துளி மறைந்திடும்
அவன் வரவால்
சூரிய காந்தியின் தலைவன் அவனே
பாரினில் பகலது மிளிர்ந்திடுமே!
கிழமைப் பெயர்களில் ஒன்றானான்(ஞாயிறு)
உழவுத் தொழிலாளர் தோழனானான்
வளங்கள் பெருக வந்திடுவான்
களனி செழிக்கும் அவனாலே!
அடர்நிறைக் காட்டினில் வெம்மை
படர்ந்திடக் காட்டுத்தீக் காரணனே
இன்னலும் தருகிறாய் இடைக்கிடை
பாலைவனத்தினில்
மாழும் உயிர்களும்
சோலைவனத்தினில் செழிக்கும் மலர்களும்
உந்தன் விந்தை சொல்லுமன்றோ!
பகலவன் ஒளி பட்டால்
சுகமது கிட்டும் என்றே
குழந்தைகளைப் பாயில் கிடத்தும்
வழக்கம் கொண்டனர் நம்முன்னோர்
பகலவனே! உனக்குப் படையலும் செய்தே
மனத்தினால் நன்றியும் கூறுவரே
உன்னை நம்பி இருப்பது பயிர்கள் மட்டுமல்ல
எங்கள் உயிரும்தான்
பகலவனே!
நீ தகிக்கச் செய்தாலும்
அகமதிலே வணங்குகிறேன் உன்னை!
நன்றி !