பகலவன்
அண்ட வெளியில்
உனது ஆட்சி
அல்லும் பகலும்
மாறிடும் காட்சி
அவனியில் பற்பல
நாமமாய் சாட்சி
அணையா விளக்காய்
ஒளிரும் நீட்சி
ஆரோக்கிய வாழ்வின்
அத்திவாரம்
ஆனந்தமாய் உயர்வின்
அத்தியாயம்
அழகாய் கிடைக்கும்
நியதி
அதுவே சத்துக்கும்
உறுதி
கோடை வந்தாலே
ஆரவாரம்
ஜாடையாக பூக்களின்
வரவும்
வாடையாய் பொருளும்
நாறும்
ஆடையும் பலவித
மாற்றமாகுமே..
செல்வி நித்தியானந்தன்