சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 254
“பங்குனி மாதம்”

பங்குனித் திங்கள் அம்மனின் சிறப்பு
எங்கும் அம்மன் பொங்கல் காணும்
பன்றித்தலைச்சி அம்மன் கோயில்
பக்தர்கள் கூடும் பங்குனி திங்கள்
பங்குனி மாதம் திருமண காலம்
முகூர்த்த வேளை பல நாள்
கூடும்
பங்குனி மாதம் பிறந்தால் வேள்வி
எங்கும் தொடங்கும்
கிடாக்கள் பலிக்கு
தயாராய் வளரும்
பங்கு இறைச்சி
போடும் வழக்கம்
ஊரில் வேள்வியில்
நித்தம் நடக்கும்.
விதைப்பும் நாத்து நடுகையுமாக
வகை வகை காய்கறி
செடிகள் உண்டாக்கும்
மாதம் பங்குனி
வெயில் காலம்
வெகுவாய் கூடும்
குரும்பை கள்ளு
ருசிப்பவர் ஏங்க
பனைகள் கொடி
ஏறும் மாதம்.
பங்குனி மாதம்
பலதும் கூடும்
பங்குனி வேள்வி
பங்கு இறைச்சிக்கு
எங்கள் வீடும்
எதிர்பார்திருக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்