சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பங்குனி
மாசிப் பனியும் மூசிப் பெய்து
தூசிகள் போக்கி தொடங்கும் பங்குனி
பங்குனி என்றால் பரவசம் தானே
மங்கள நாட்கள் மகிழ்வுடன் வருமே

மண்ணில் முகுழும் மொட்டுக்கள் மலரும்
கண்ணில் தெரியும் கருவண்டுச் சுற்று
பண்ணாய் பாடிப் பரவச மூட்டும்
விச்ணில் பறவைகள் வேகமாய் வட்டமிடும்

திருமணம் என்ற தெவிட்டாத செல்வம்
ஒருவரை ஒருவர் உயிருடன் பிணைத்து
மணமும் முடித்து மாங்கல்யம் பெற்று
கணமெனும் பிரியாக் காதலர் ஆவர்

புதுமனை புகுதல் பூப்பு நீராட்டு
எதுவென் றாலும் இம்மாதம் நடக்கும்
பொங்கும் மனமும் பங்குனித் திங்களால்
பங்குனி என்றால் பரவசம் தானே

கமலா ஜெயபாலன்