சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும்சந்திப்பு!
பங்குனி!

தங்கியகுளிர் விரட்டித்
தரணி கதகதக்கத்
திங்களின் மூன்றாகித்
தித்திப்பாய் வருபவளே
பங்குனியே என்வாழ்வின்
பங்காய் நீயும்
பவனுகின்ற உறவென்றே
பரவசமாய்க் காத்திருப்பில்!

சிட்டுக்கள் பாடும்
சீதளம் வீசும்
மொட்டைத் தருக்களில்
முகையிடும் அரும்பும்
கொட்டிடும் மேளம்
கூடும் திருமணம்!
எட்டிய பசுமை
எழிலுடன் மீளும்!

சுற்றிடும் வாழ்வின்
சுந்தரத் துடுப்பாய்ப்
பற்றியே தொடரும்
பக்கத் துணையும்
பக்கத்தில் என்றும்
பாங்கான பங்கு நீ!

கீத்தா பரமானந்தன்
19-02-24