சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.02.2024
கவிதை இலக்கம்-254
“பங்கு நீ”
பங்கு சந்தையிலே
உலகமே சரி பாதி
அங்காடி தெருவினிலே
பொருட்கள் நிறை குறை பாதி
மக்கள் வாங்கி உண்கையிலே
பங்கு பாதி வயிறு நிரம்பாத சேதி
பங்குனி 28ல் கைப்பிடித்த கணவனார் பிறப்பு
எமக்கு விட்டுச் சென்ற சொத்து
பங்குகள் பெரும் மதிப்பு
காணி வீடு வயல் என பங்குகளோ சிறப்பு
பிள்ளைகள் பங்கு பிரித்து கொடுத்ததோ
எதிலும் பாதி நீங்கதானப்பா
விண்ணில் புகுந்தாலும்
என் நெஞ்சினில் சரி பாதியப்பா
பிள்ளைகள் அன்பு அணைப்பிலும் சரி
பங்கும் நீங்கதானப்பா