சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம் 138

“பங்குனி”

காலை பொழுது
இருள் அகற்றி
ஒளி தரும் சூரியபகவான் ஒளி கண்ட உள்ளமது
உளமகிழ்ந்து
பள்ளி மாணவர்
மகிழ்ந்து ஓடும் பங்குனி

பங்குனி படர்தொடராய் மரம் செடி கொடி முளை விட்டு தழை கொள்ளும் மாதம் நீ

விவசாயி நிலம் உழுது
பண்படுத்தி
பசளை இட்டு
பருவம் பாத்து பயிர் செய்யும் காலம் நீ

இல்வாழ்வில்
நல்வாழ்வில்
நீ பாதி
நான் பாதி
காத்திருந்து
கை கோத்த
காவலர் என்
பாவலர் உதித்த உன்னத மாதம் பங்குனி!!

நன்றி
வணக்கம்