சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 254

தலைப்பு – பங்கு நீ

பங்கு நீ பகுத்தறிவும் நீ
பாரினில் கிடைத்த பொக்கிஷம் நீ
பண்பு நீ அன்பும் நீ
படைத்தவன் வியக்கும் பாவையும் நீயே.

பக்குவ வார்த்தையில் பாரதி நீ
பரம்பரை புகழ் காக்க வந்தவளே
படிகள் பலவேற தடைகள் வந்தாலும்
பண்டிதனாய் உருவாகு பூவுலகம் பெருமைப்பட.

போதையாய் இருந்தால் பேதை அன்று
போரினில் தலைபதியாய் தலைமை இன்று
படைப்பாளியாய் நாசாவில் பங்களராய் இன்று
புவியில் அரசியலின் புகழிலும் பங்கு-நீ.

பங்கு நீ பங்குனியிலும் நீ
எங்கும் நீ எதிலும் நீ
திங்கள் நீ திசையெல்லாம் நீ
தங்கம் நீ தரணியை காத்திடு.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
16/02/2024