பங்கு நீ
கார்மேக இ௫ளும்
க௫ணை மிகு பகலும்
சோர்வற்று சுற்றும்
சொர்கமாய் சேவை
சுழலும் பங்கு நீ
விடாது ஓடும் இதயம்
விழாமல் தாங்கும் ௨டலும்
ஒழுகும் வாழ்வியல் பிறப்பு
ஓய்ந்தால் மண்ணியல் இறப்பு
நீதியின் பங்கு நீ
க௫வென்றின் ௨டலுறை
ஆண் பெண்ணின்
வாழ்வுறை
தோய்வினறி வழுவூட்டும்
௨யிரியல் பங்கு நீ
செங்கு௫திக்குள் அடைகாத்து
செ௫மெழுகாய் ௨ன்னைவார்த்து
படைப்பின் சிகரமாய்
வயிற்றில் சுமர்ந்து வலியால்
வந்த ௨றவு அன்னையும் மகவும்
மகத்தான பங்கு நீ
தொட௫ம் நிகழ்வில் நிரையாய்
தொங்கும் பங்குள் பங்காய்
எதுயில்லை பாரில்
நன்றி
வஜிதா முஹம்மட்