20.02.24
ஆக்கம் -135
பங்கு நீ
அவனியில் பங்குனியாய்ப்
பவனி வருவதில் பாங்கு நீ
தரணியில் தாவித் தாவி
பூரணியாவதில் பங்கு நீ
தங்கு தடையின்றி அங்கும்
இங்கும் எங்கெங்கும் விரதம்
பௌர்ணமியில் மனம் குளிர
சொந்த சோகம் தாங்கும் நீ
ஆனந்தத் திங்கள் ,பங்குனி
உத்தரப் பேரானந்த உற்சவ
ஊரானந்தமதில் திருமணக்
கொண்டாட்டப் பங்கு நீ
குருத்து ஞாயிறும் கூட வரும்
வருத்தும் குளிரும் கூடி வரும்
கொழுத்த வெயில் குட்ட வரும்
அழுத்திய மனதின் பங்கு நீ .