சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 254
20/02/2024 செவ்வாய்
“பங்கு நீ”
————
பங்கு நீ! பாதி நீ-என்
பாச மலரே என்றும் நீ!
இங்கு நான்-அங்கு நீ!
இருப்பதேன் விளம்பு நீ!

திங்கள் நீ திசையும் நீ!
தீங்கில்லாத திருவும் நீ!
எங்கள் ஊர் ஒளியும் நீ!
எல்லா மனமும் கவரும் நீ!

எங்கும் நீ எதிலும் நீ!
ஏழை வீட்டு விளக்கும் நீ!
சங்கம் புகழ் சரித்திரம் நீ!
சாளரம் ஊடே சிரிப்பதும் நீ!

பங்குனி மாசத்து பரவசம் நீ!
பாவையர் மனதில் படிவதும் நீ!
கங்குல் வரையும் விழிப்பதும் நீ!
காதலர் வரைகவி ஓவியம் நீ!

அங்கு இங்கென அலைவாய் நீ!
ஆண் டாண்டாய் நிலவாய் நீ!
பங்கம் செய்த பிறையாய் நீ!
பரமன் சடையில் உறைவாய் நீ!
நன்றி
மதிமகன்