சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

“சந்தம் சிந்தும் சந்திப்பு 253 பிள்ளைக் கனி அமுது”

இல்லறத்தில் இணைந்து பிள்ளை பேறுக் ஏங்கி
ஈர் எட்டு ஆண்டு பல
கோயில் நேர்த்தி
சொல்லரிய மருத்துவங்கள்
தொடர்ந்து பார்த்தும்
சோகம் தான் மலடு என
சொல்லும் கொல்ல
வல்லள் இந்த மாரி அம்மன்
வரத்தை கோர
வாய்துவிடும் பேறு என்று
வணங்க சொன்னார்
இல்லை இனி வழி இதையும்
இன்றே செய்வோம்
என்றாள் என் மனையாள்
ஏழாம் செவ்வாய்….

வயிற்றினிலே கரு ஒன்று
வளருதென்று
வைத்தியரின் சோதனையில்
வந்த செய்தி
இதன் பின்னர் ஸ்கானிங்கல்
இரணை பிள்ளை
இருக்கிறது என்று வந்த
இன்ப செய்தி
உயிர்பில் உள்ளம் உவகையிலே மூழ்க நாட்கள்
ஒவ்வொன்றை எண்ணும் மனம் எட்டாம் மாதம்
எடுத்திடுவோம் அறுவையிலே
வெளியே என்றார்
இல்லை எனில் தாய்க்கு
ஏதும் ஆகும் என்றார்.

இடி விழுந்த நிலை போல இதயம் ஆக
இது ஒன்றே வழி என்று
பலரும் தேற்ற
மடிப்பிச்சை நேர்த்திக்கு
மனம் இரங்கி
மகிழ வைத்த அம்மன் மேல்
பாரம் போட்டு
நடு நடுங்கி காத்திருந்தேன்
இரண்டு முத்தை
நர்ஸ் தந்தாள் கைகளிலே
ஆண் பெண்ணாக…

புது உலகில் புகுந்துவிட்ட புத்துணர்ச்சி
பொழுதெல்லாம் மனம்
காணும் பேர் எழுச்சி
உதிரும் அவர் மழலையிலே
அழகில் சொக்கி
ஓயாமல் ஸ்பரிசத்தில் தினம்மயங்கி
இருபத்து மூன்றாண்டு கடந்து
பிள்ளை
இணைகின்றாள் திருமணத்தில் இன்ப செய்தி
பிறக்கும் உயிர் எதற்கும் பிள்ளை கனியே தேவை
பெயர் சொல்ல வம்ச வழி
அம்சம் காவ.
-எல்லாளன்-